
Last Updated:
TN Weather Update | கடலோர தமிழ்நாடு, உள்தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மிதமான மழை
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், கடலோர தமிழ்நாடு, உள்தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னையிலும் மிதமான மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: நடுரோட்டில் போலீஸ் முகத்தில் அடித்த இளைஞர்.. காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
கனமழைக்கு வாய்ப்பு
இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் நாளை மிக கனமழை பெய்யலாம் என்றும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
March 10, 2025 6:45 AM IST