
Last Updated:
Shihan Hussaini: கராத்தே மாஸ்டர் மற்றும் நடிகர் ஷிஹான் ஹுசைனி புற்றுநோயால் உயிரிழந்தார். மதுரையைச் சேர்ந்த அவர், 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.
கராத்தே மாஸ்டரும், பிரபல நடிகருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த ஷிஹான் ஹுசைனி கராத்தே மாஸ்டர். மேலும் 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்தவர். கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான ஷிஹான் ஹுசைனி, விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட ஹுசைனி, சமீபத்தில், தனக்கு இரத்தப் புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். தனது உடல்நிலை குறித்துப் பேசிய அவர், தனது முன்னாள் மாணவர்களான பவன் கல்யாண் மற்றும் விஜய் ஆகியோரிடம் உதவி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறினார். தனக்கு தினமும் இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும், தனது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க தனது பயிற்சி மையத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும் ஹுசைனி தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் உதவி செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். உயிரிழப்பை அவர் வலைதளம் மூலமாக அவரின் குடும்பம் உறுதி செய்துள்ளது. அதில், “ஹூசைனி நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் உடல் மாலை வரை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லமான ஹை கமாண்டில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிஹான் ஹுசைனி ஒரு புகழ்பெற்ற கராத்தே நிபுணர் மற்றும் நடிகர் ஆவார், அவர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். கே. பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான ஹுசைனி, ஹாலிவுட் படமான பிளட்ஸ்டோன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 25, 2025 6:52 AM IST
[]
Source link