‘விடாமுயற்சி’ தாமதத்திற்கு அஜித் என்ன சொன்னார்..? மகிழ்திருமேனி ஓபன் டாக்

Spread the love



Last Updated:

விடாமுயற்சி படப்பிடிப்பு 121 நாட்களில் முடிந்தது என இயக்குநர் மகிழ்திருமேனி தெரிவித்தார்.

அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வரும் 6-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விடாமுயற்சி திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை முடிக்க இயக்குநர் அதிக நாட்களை எடுத்துக் கொண்டார் என்று சிலர் இணையதளங்களில் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் பிரத்யேக நேர்காணலில் இயக்குநர் மகிழ்திருமேனி முற்றிலும் மறுத்திருக்கிறார். அதுவும் படப்பிடிப்பு வெறும் 121 நாட்கள் மட்டுமே நடைபெற்றது என்றும் கூறியிருக்கிறார்.

2023 அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிக்கத் திட்டமிடப்பட்டதில் சீதோசண நிலை காரணமாக மட்டுமே படப்பிடிப்பு விட்டுவிட்டு நடைபெற்றது. தன்னால் படப்பிடிப்பு காலம் அதிகமானதாகத் தகவல், செய்திகள் பரவியது மன வருத்தத்தைக் கொடுத்ததாகவும் மகிழ்திருமேனி தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சி படப்பிடிப்புக்கு சீதோசண நிலை காரணமாகத் தடைகள் ஏற்பட்டு வந்த நிலையில், நடிகர் அஜித் பக்கபலமாக இருந்தார் என்றும் அஜித் சொன்ன உதாரணத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார். “விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிட்டோம். அனைத்துப் பணிகளும் முடிவடைந்தும் அந்தத் தேதியில் வெளியாகாதது தனக்கு மட்டுமல்லாமல், படக்குழுவினருக்கும் ஏமாற்றம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடாமுயற்சி படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது குறித்து அஜித் கூறுகையில், “பண்டிகைக்கு வெளியாகவில்லை என்றால் என்ன. நம் படம் வெளியாகும் நாள் பண்டிகை” என்று அஜித் தெரிவித்ததாக மகிழ்ச்சியுடன் கூறினார் மகிழ்திருமேனி.

விடாமுயற்சி திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. துணிவு திரைப்படத்திற்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தைக் கொண்டாட அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    ரஜினியின் ஜெராக்ஸ்… முதல் படம் ரிலீசாகும் முன் நடந்த துயரம்

    Spread the love

    Spread the love      அப்போது எக்காரணத்தை கொண்டும் ரஜினிகாந்தின் பிரதிபலிப்பை வெளிப்படுத்தக் கூடாது என்று படக்குழு ஸ்ட்ரிக்டாக கூறியிருக்கிறது. அப்படி இருந்து ரஜினியின் மேனரிஸத்தை மாஸ்டர் சுரேஷ் வெளிப்படுத்த அவரை கமல்ஹாசன் செல்லமாக திட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படி, ‘கல்லுக்குள் ஈரம்’,…


    Spread the love

    OTT Spot: சூரியின் ‘மாமன்’ ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

    Spread the love

    Spread the love      Last Updated:July 28, 2025 9:39 PM IST சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *