Last Updated:
சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படமாக இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படம் அடுத்து ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அலையே அலையே’ பாடல் வெளியானது. ஷான் ரோல்டன் – தீ இணைந்து பாடிய இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ரவி மோகன் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
November 10, 2025 10:21 PM IST
[]
Source link







