
மேலும், ரூ.6,181 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மே 19, 2023 அன்று வர்த்தகம் முடியும்போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை மே 31, 2025 அன்று வர்த்தகம் முடியும்போது ரூ.6,181 கோடியாகக் குறைந்துள்ளது.
முன்னதாக வங்கிக் கிளைகளில் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ளும் விருப்பம் அக்டோபர் 7, 2023 வரை வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தேதிக்குப் பிறகு, இந்த வசதி ரிசர்வ் வங்கியின் 19 வங்கி அலுவலகங்களில் மட்டுமே கிடைத்து வருகிறது. “தனி நபர்கள்/நிறுவனங்களிடமிருந்து அக்டோபர் 9, 2023 முதல், RBI வெளியீட்டு அலுவலகங்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வதற்காக ஏற்றுக் கொள்கின்றன” என்று RBI ஒரு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த வசதியை வழங்கிவரும் 19 ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்கள் அகமதாபாத், பெங்களூரு, பெலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
மேலும், பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ரூ.2,000 நோட்டுகளை இந்திய தபால் மூலம் நாட்டிற்குள் உள்ள எந்தவொரு தபால் நிலையத்திலிருந்தும் ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவையாகவே இருப்பதாக ரிசர்வ் வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
முன்பு புழக்கத்தில் இருந்த அனைத்து ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு அவற்றின் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்து திரும்பப் பெற்ற பிறகு, பணப்புழக்கத்திற்கான நாணயத் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்ய, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் ரூ.2000 நோட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச் சூழலில் ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் பணப்புழக்கத்திற்கு மக்கள் கையில் கிடைத்தவுடன் நிறைவேறியது. எனவே, 2018-19ஆம் ஆண்டில் புதிதாக ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
June 04, 2025 4:55 PM IST
[]
Source link