பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வியா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

Jayakumar : அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஜெயக்குமார்ஜெயக்குமார்
ஜெயக்குமார்
அதிமுக சார்பில் சென்னையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருந்து உள்ளதாக குறிப்பிட்டார். சிறுபான்மையினர் நலனில் திமுக எப்போதும் இரட்டை வேடம் மட்டுமே போடுவதாகவும் விமர்சித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால்தான் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைப்பதில்லை என்பது உண்மை இல்லை என்று கூறிய அவர், கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளும் வெவ்வேறு கோட்பாடுகளும், கொள்கைகளும் கொண்ட கட்சிகள் எனவே தேர்தல் வெற்றி, தோல்விக்கு அவை காரணமாக இருக்காது என்று கூறினார்.



Source link


Spread the love
  • Related Posts

    அமெரிக்க, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு | Medicine Nobel 2025 awarded to trio for immuno-regulatory T cells discovery

    Spread the love

    Spread the love      மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு,…


    Spread the love

    “விஜய் இனி ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்” – கமல் ஹாசன் எம்.பி. | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:October 06, 2025 10:00 PM IST மநீம தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். News18 தவெக தலைவர் விஜய் இனி ஒரு தலைவராக செய்ய…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *