
Last Updated:
“ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் என சொல்ல வேண்டாம். அங்கிருப்பவர்களும் மனிதர்கள் தான் நாமும் மனிதர்கள் தான்” என பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
“ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் என சொல்ல வேண்டாம். அங்கிருப்பவர்களும் மனிதர்கள் தான் நாமும் மனிதர்கள் தான்” என பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் வரும் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ந
இது தொடர்பாக விஜய் ஆண்டனி கூறுகையில், “பாகிஸ்தானில் உள்ள மக்கள் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. வீணா போன 4 பேர் யாராவது இதை செய்திருப்பார்கள். அதற்காக பாகிஸ்தான் என ஒட்டுமொத்தமாக நாம் சொல்லிவிடக்கூடாது.
ரஜினி சொன்னது போல், தப்பானவர்கள் செய்த செயல் இது. அதனால் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் என சொல்ல வேண்டாம். அங்கிருப்பவர்களும் மனிதர்கள் தான் நாமும் மனிதர்கள் தான்” என்றார்.
தொடர்ந்து பாடல்கள் மீதான காப்புரிமை விவகாரம் குறித்து பேசிய விஜய் ஆண்டனி, “இளையராஜாவை பொறுத்தவரை அவர் காசுக்காக காப்புரிமை கேட்கவில்லை. என்னிடம் அனுமதி வாங்கியிருக்கலாமே என்று தான் சொன்னார். பலருக்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்து கொடுத்தவர். பல புதிய நடிகர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கியவர். பண ஆசை இல்லாதவர்” என்றார்.
April 26, 2025 10:10 PM IST
[]
Source link