பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு காஷ்மீருக்கு மீண்டும் விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிவிப்பு | IRCTC announced Air tourism to Kashmir resumes after Pahalgam attack

Spread the love


சென்னை: பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, காஷ்மீருக்கு நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணத் திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்.22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் நிறுத்தப்பட்டது. இதுதவிர, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும்( ஐ.ஆர்.சி.டி.சி) சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா பயணத் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது, அங்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில்,சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா பயணத்திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு சிறப்பு விமானம் ஜூன் 22-ம் தேதி புறப்படுகிறது.

ரூ.48,000 கட்டணம்: அங்கு ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம், சோன்மார்க், கார்கில் மற்றும் ஹெளஸ்போட் ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர். 7 நாட்கள் பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.48,000 ஆகும்.

விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, சுற்றுலா மேலாளர் , பயணக்காப்பீடு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை சுற்றுலாவில் அடங்கும். முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 9003140682 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, பயணிகளின் பாதுகாப்பை கருதி சென்னையில் இருந்து காஷ்மீருக்கு விமான சுற்றுலா பயணத்திட்டத்தை ஒரு மாதத்துக்கு நிறுத்தி விட்டோம். ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே வரை காஷ்மீர் பயணத் திட்டத்துக்கு அனைத்து டிக்கெட்களும் முன்னதாகவே விற்று விட்டன.

பயணிகள் பாதுகாப்பு கருதி பயணத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அங்கு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சிறப்பு விமான சுற்றுலா ஏற்பாடு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினர்.





Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *