
Last Updated:
கோயிலுக்கு அருகில் ஓடும் ராவை ஆறு (Rawai river), கோயிலின் எந்த திசையிலும் அரிப்பை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக கிராமத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. உள்ளூர் மக்கள் இதை அன்னை தேவியின் மகிமையாகவும், முழு கிராமத்திற்கும் அன்னை பாதுகாப்புக் கவசமாக இருப்பதாகவும் கருதுகின்றனர்.
பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் 300 ஆண்டுகள் பழமையான துகஹா சமய் மாதா கோயில் பற்றி தெரியுமா?. முழு விவரங்களுக்கு இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.
உத்தரப் பிரதேசத்தின் பஸ்தியில் உள்ள துகஹா சமய் மாதா கோயில் ஒரு புனித ஸ்தலமாகும். அந்த கோயிலின் ஒவ்வொரு அடியிலும் நம்பிக்கையின் எதிரொலி கேட்கிறது என்றே சொல்லாம். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில், பக்தர்களின் அசைக்க முடியாத பக்தி மையமாக உள்ளது. உண்மையான மனதுடன் இங்கு யார் வந்து வேண்டிக் கொள்கிறார்களோ, அவர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
அதிசய நிகழ்வுகள் மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் நிறைந்த இந்த கோயிலானது தெய்வீக சக்தியால் நிறைந்துள்ளது. இங்கே ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மக்களின் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக நவராத்திரியின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகிறார்கள். இந்த அற்புதமான இடத்தில் வீற்றிருக்கும் அன்னை தேவியின் மகிமைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
இந்த கோயிலில் பல ஆண்டுகளாக பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். துகா சமய் மாதா கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இது பஸ்தி மாவட்டத்தில் உள்ள கத்ரா புசுர்க் கிராமத்திற்கு அருகில் உள்ள ராவாய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சிறப்புத் திருவிழாக்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னை தேவியை தரிசிக்க வருகிறார்கள். இது தவிர இங்கு ஆண்டுதோறும் நவராத்திரியின் போது ஒரு சிறப்பு திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
அன்னை தேவியின் கோயிலுக்கு உண்மையான மனதுடன் வரும் பக்தர்களின் அனைத்து விருப்பமும் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒருமுறை, கால் ஊனமுற்ற ஒரு பெண் தன் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த கோயிலுக்கு வந்து அன்னை தேவியை தரிசனம் செய்தார். இதனையடுத்து அன்னையின் அருளால் ஊனம் குணமாகி தனது சொந்த காலில் வீடு திரும்பினாள். அன்னையின் அருளால் ஊனம் குணமானதை அடுத்து, தவறாமல் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுகிறார். இந்த சம்பவம் அன்னையின் அற்புதமான சக்திக்கு உதாரணமாக கருதப்படுகிறது.
சுமார் 35 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் இந்த தரிசு நிலத்தை பசுமையாக்க முயற்சி செய்து இங்கு மரங்களை நட்டனர். மேலும், அன்னைக்கு மேடை கட்டப்பட்டதை அடுத்து, பக்தர்களின் வழிபாட்டு தலமாக மாறியது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் இங்கு மாதா சிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறுவத் தொடங்கினர். இதனையடுத்து தற்போது இங்கு 500க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன, இது இங்கு வரும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றியதை குறிக்கிறது.
கோயிலுக்கு அருகில் ஓடும் ராவை ஆறு (Rawai river), கோயிலின் எந்த திசையிலும் அரிப்பை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக கிராமத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. உள்ளூர் மக்கள் இதை அன்னை தேவியின் மகிமையாகவும், முழு கிராமத்திற்கும் அன்னை பாதுகாப்புக் கவசமாக இருப்பதாகவும் கருதுகின்றனர். கான்பூர், லக்னோ, கோண்டா, பஹ்ரைச், பல்ராம்பூர் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதாவை தரிசனம் செய்யவும், வழிபடவும் இங்கு வருகிறார்கள்.
December 03, 2024 10:55 AM IST
[]
Source link