Last Updated:
செங்கோட்டையன், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் முக்கிய தகவல்கள் உள்ளன என கூறினார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தாம் வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.
கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறினார்.
“தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முக்கிய தகவல்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தின் விவகாரங்களை வெளியே சொல்லக்கூடாது எனும் விதி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருப்பதாகவும் தன்னை யாரும் தனிப்பட்ட முறையில் இயக்க முடியாது என்றும் செங்கோட்டையன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவில் குடும்ப ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியலில் ஈடுபட்டுவருகிறார்” எனத் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் இருந்து தன்னிடம் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த செங்கோட்டையன், அவர்கள் யார் என்பது குறித்து சொன்னால் அவர்களுக்கு தான் ஆபத்து என்றார்.
November 05, 2025 9:14 PM IST
[]
Source link





