‘தீபாவளிக்கு ரிலீஸாகும் 3 படங்களையும் தியேட்டரில் பாருங்க..’ – இளம் நடிகர்களை ஆதரித்து சிம்பு பதிவு | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

அன்பான ரசிகர்களே, இந்த தீபாவளி நம்ம யங்ஸ்டர்களுக்கானது. டீசல், டியூட், பைசன் படங்கள் அன்பு, நம்பிக்கை, கடின உழைப்பால் உருவாகியுள்ளன.

சிம்புசிம்பு
சிம்பு

தீபாவளிக்கு ரிலீசாகும் 3 படங்களையும் தியேட்டரில் பாருங்க என்று இளம் நடிகர்களை ஆதரித்து சிம்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

இந்த தீபாவளிக்கு துருவ் விக்ரம் நடித்த பைசன், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் மற்றும் பிரதீப் நடித்துள்ள டியூட் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்த படங்களுடைய இறுதிக் கட்ட புரொமோஷன் நடைபெற்று வருகிறது.

மூத்த நடிகர்களின் படங்கள் இல்லாமல் இந்த தீபாவளிக்கு இளம் ஹீரோக்களுடைய படஙகள் வெளியாகின்றன. நாளை இந்த படங்கள் வெளியாகவுள்ள நிலையில் எந்த படத்திற்கு முதலில் செல்லலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

மேலும் 3 படங்களின் ட்ரெய்லர்களை ஒப்பிட்டு பார்த்து ரசிகர்கள் ரேட்டிங் செய்து வருகிறார்கள். இதற்கிடையே அனிருத்தின் பிறந்த நாளையொட்டி சிம்பு – வெற்றி மாறனின் அரசன் படத்துடைய புரொமோ இன்று தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நாளை இந்த ப்ரொமோ யூடியூபில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 3 படங்களும் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

அன்பான ரசிகர்களே, இந்த தீபாவளி நம்ம யங்ஸ்டர்களுக்கானது. டீசல், டியூட், பைசன் படங்கள் அன்பு, நம்பிக்கை, கடின உழைப்பால் உருவாகியுள்ளன.

இந்த படங்களை ஒப்பிட்டு பார்க்காமல் தமிழ் சினிமாவின் அங்கமான அவற்றை கொண்டாட வேண்டும். சினிமாவில் இருப்பவர்கள், இப்போது காலடி வைத்துள்ளவர்கள், இனி வைக்கப் போகிறவர்களுக்கு ஆதரவு தாருங்கள். ஒன்றிணைந்து இந்த சினிமாவை உயிர்ப்புடன் வைப்போம்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிப்பதை நிறுத்திய நடிகை ரோஜா.. என்ன சொன்னார் தெரியுமா?  | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘செம்பருத்தி’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. ‘சூரியன்’, ‘உழைப்பாளி’, ‘அதிரடிப் படை’, ‘ராஜமுத்திரை’, ‘ராசைய்யா’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘என் ஆசை ராசாவே’, ‘ஏழையின்…


    Spread the love

    “தலைவர் பனையூரில் பதுங்கிவிட்டார்..” – சூரி கொடுத்த பதிலடி

    Spread the love

    Spread the love      நடிகர் சூரி தான் சொன்னதாக கூறி சமூக வலைதளங்களில் பரவிய பொய் செய்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். [] Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *