
Last Updated:
சிம்பு நடிக்கும் அவரது 48-வது படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு நடிக்கும் அவரது 48-வது படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘பத்து தல’. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் இதுதான். பின்னர் 2 வருடங்களாக தற்போது வரை எந்த படமும் வெளியாகவில்லை. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் அறிவிப்பு அவரது பிறந்த நாளில் வெளியானது. இந்தப் படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் கல்லூரி மாணவர் லுக்கில் நின்றுகொண்டிருந்த சிம்பு, கையில் புத்தகம் வைத்திருப்பார். அதில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ‘மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்’ என எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்துக்கு யார் இசையமைப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் படத்துக்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் பதிவில், “புதிய அத்தியாயத்தை இசை மற்றும் புதிய எனர்ஜியுடன் தொடங்குகிறேன்.
‘எஸ்டிஆர்49’ படத்துக்கு சாய் அப்யங்கரை வரவேற்கிறேன்” என பதிவிட்டுள்ளார். தவிர, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
April 14, 2025 12:11 PM IST
[]
Source link