
Last Updated:
‘கண்ணப்பா’ படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. பொறுப்புடன் விமர்சிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
’ரெட்ரோ’, ’தக் லைப்’ திரைபடங்கள் வெளியான முதல் நாளிலேயே கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், நாளை வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’ படம் பற்றி அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என படக்குழு எச்சரித்துள்ளது.
படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கண்ணப்பா’ படம் பொதுமக்களுடன் அதிக அளவில் தொடர்புபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விமர்சகர்கள் முன்கூட்டியே திட்டமிட்ட உள்நோக்கம் அல்லது பழிவாங்கும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், படத்தைப் பார்த்து புரிந்துகொண்டு, பின்னர் பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை பாதுகாக்கும் அதே வேளையில், ஒரு படைப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விமர்சனங்கள் இருந்தால், அது கருத்துரிமை அல்ல என்றும் மாறாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு வகையான செயல் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதையும் படக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, கண்ணப்பா படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் கூறியுள்ளது. வணிக ரீதியாகவோ, அல்லது வேறு ஏதேனும் ஆதாயங்களுக்காகவோ மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சு பற்றி அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்ணப்பா படக்குழு தெரிவித்துள்ளது.
June 26, 2025 7:25 AM IST
[]
Source link