இந்தி நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு: 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Spread the love


Last Updated:

இந்தி நடிகர் சைஃப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்திய வழக்கில் பாந்த்ரா காவல்நிலையத்தினர் ஆயிரம் பக்கத்துக்கும் மேலான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

News18News18
News18

இந்தி நடிகர் சைஃப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்திய வழக்கில் பாந்த்ரா காவல்நிலையத்தினர் ஆயிரம் பக்கத்துக்கும் மேலான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் சைஃப் அலிகானின் வீட்டில் புகுந்து திருட முயன்ற நபர், சரமாரியாக குத்தியதில் சைஃப் அலிகான் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த சைஃப் அலிகான் ஜனவரி 21-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாந்த்ரா காவல்நிலையத்தினர் முகமது ஷரிஃபுல் இஸ்லாம் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் கைரேகை, உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் காவலர்கள் சமர்பித்தனர்.

இந்த வழக்கில் முக்கிய ஆவணங்களை சுட்டிக்காட்டி ஷரிஃபுல் இஸ்லாமுக்கு பிணை வழங்கக்கூடாது என்று வாதிட்டனர். மேலும் கைதான ஷரிஃபுல் இஸ்லாம் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவர் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் வாசிக்க: ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிரான ஜெயலலிதாவின் நடவடிக்கை… 30 ஆண்டுகளுக்கு பின் மனம் திறந்த ரஜினி

இந்நிலையில் இது தொடர்பான 1,000 பக்கத்துக்கும் மேலான குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். சைஃப் அலிகான் நடிப்பில் அண்மையில் ‘தேவரா’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அவர் நடிப்பில் அடுத்ததாக Jewel Thief திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    பிரமாண்டமான விஷூவல்ஸ்… மகேஷ் பாபு இன்ட்ரோ.. ராஜமவுலியின் ‘வாரணாசி’ டைட்டில் டீசர் வெளியீடு! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      Last Updated:November 15, 2025 9:58 PM IST ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.  மகேஷ் பாபு ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின்…


    Spread the love

    பாகுபலி 'சிவகாமி' கேரக்டரில் ஸ்ரீதேவி? – போனி கபூர் பேசியது என்ன?

    Spread the love

    Spread the love      பாகுபலியின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‘பாகுபலி எபிக்’ வெளியாகும் நேரத்தில் போனி கபூர் வெளியிட்டுள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. [] Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *