“இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டது” – இலங்கை கடற்படை தளபதி | Sri Lanka Navy chief says accidental firing injured Indian fishermen

Spread the love


கொழும்பு: காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தவறுதலாக நடந்த ஒன்று என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகோட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியர்கள் மீது இலங்கை கடற்படை வேண்டும் என்று துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. இலங்கை கடற்பகுதியில் இந்திய மீன்பிடி இழுவைப்படகு ஒன்றைக் கண்ட கடற்படை வீரர்கள், அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர். அதற்கு அவர்கள் இணங்காததால், சந்தேகம் காரணமாக அவர்களை கடற்படை வீரர்கள் தங்கள் படகில் ஏற்றினர். அவர்கள் கடற்படை படகில் ஏறியபோது, ​​விசாரணையை தொந்தரவு செய்யும் வகையில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். கடற்படை வீரர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுத்த இரண்டு இந்தியர்களுடனான மோதலின் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்தது” என தெரிவித்துள்ளார்.

பின்னணி: காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல்(39), தினேஷ் (30), காரத்திகேசன்(27), செந்தமிழ் (27), பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன்(22), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியைச் சேர்ந்த நவெந்து (34), வானகிரியைச் சேர்ந்த ராஜேந்திரன்(36), ராம்கி(30), நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த சசிகுமார்(26), நந்தகுமார்(30), பாபு(31), குமரன்(28) ஆகிய 13 பேர் கடந்த 26-ம் தேதி காலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.

இவர்கள் கடந்த 27ம் தேதி இரவு 9.30 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். முன்னதாக, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 5 மீனவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாக் ஜலசந்தியில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு அருகே இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இருவர் படுகாயமடைந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. படுகாயமடைந்த 2 மீனவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு உதவி வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.

தூதரை அழைத்து கண்டனம்: இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள இலங்கையின் (பொறுப்பு) தூதரை அழைத்து தனது எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் இந்த பிரச்சினையை இலங்கை அதிகாரிகளிடம் எழுப்பியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மீனவர்கள் மீது கடற்படையை ஏவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த சூழ்நிலையிலும் இலங்கையின் இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்களின் பிரச்சினைகளை அவர்களின் வாழ்வாதாரக் கவலைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். மேலும், மீன்பிடி தொழில் தொடர்பாக தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்றும் இலங்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.





Source link


Spread the love
  • Related Posts

    அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர் | Trump must stop Gaza war if he wants Nobel Peace Prize French President Macron

    Spread the love

    Spread the love      பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *