
Last Updated:
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீர தியாகிகளில் ஒருவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சாவடி அருணாச்சலம் பிள்ளை. 79 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடிய நாளில் சாவடி அருணாச்சலம் பிள்ளை குறித்து பார்க்கலாம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீர தியாகிகளில் ஒருவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சாவடி அருணாச்சலம் பிள்ளை. 79 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் நாளில் சாவடி அருணாச்சலம் பிள்ளை குறித்து பார்க்கலாம். சாவடி அருணாச்சலம் பிள்ளையின் வீடு இன்றும் செங்கோட்டையில் அதே சாவடி அமைப்பில் இருந்து வருகிறது. அதில் அவரின் மருமகள் மற்றும் பேரன் வாழ்ந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமாக அறியப்பட்டவர்கள் பூலித்தேவன், வாஞ்சிநாதன் உள்ளிட்டார். ஆனால் பலரால் அறியப்படாதவர் தான் சாவடி அருணாச்சலம் பிள்ளை. ஒருங்கிணைந்த திருநெல்வேலி சாவடி எஸ். அருணாசலம் பிள்ளியில் இந்திய விடுதலைப் போர்க்களத்தில் உருவெ டுத்த புரட்சிகர குழுக்களில் ஒன்று பாரதமாதா சங்கம். செங்கோட்டையில் அமைக்கப்பட்ட பாரத மாதா சங்கத்துக்குத் செயலாளராக சாவடி எஸ்.அருணாசலம் பிள்ளையும் விளங்கினர். உறுப்பினர்களாக வாஞ்சிநாதன் உள்ளிட்ட சிலர் இருந்தனர். 14.4.1911-இல் சங்கத்தின் ரகசியக் கூட்டம் அருணாசலம் பிள்ளை வீட்டில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் வாஞ்சிநாதன், அருணாசலம் பிள்ளை, ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை உள்ளிட்ட சிலர் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில்தான் அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆவஷக் கொலை செய்ய முடிவு செய்யப்பட்டதோடு அதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது. இந்த முடிவை நிறைவேற்ற வாஞ்சிநாதன் தேர்வு செய் செய்யப்பட்டார். 1911 ஜூன் 17 காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் திட்டமிட்ட வாறு வாஞ்சிநாதனால் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மரணமடைந்தார் வாஞ்சிநாதன்.
கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்த அருணாசலம் பிள்ளையைக் கல்லூரி விடுதியில் 23.06.1911-இல் போலீசார் கைது செய்தனர். பிள்ளையின் கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு அழைத்துவந்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். “திருநெல்வேலி சதி வழக்கு” என்கிற ஆஷ் கொலை வழக்கில் சுமார் 237 நாள்கள் பிறகு விடுவிக்கப்பட்டார். மருத்துவப் படிப்பும் தொடர முடியாமல் 1919 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுள்ளார். 1930 உப்பு சத்தியாகிரகத்தில் பலரைப் பங்கேற்க வைத்துள்ளார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அறப் போராட்டத்தில் பயணித்த அருணாசலம் பிள்ளை 27.4.1938-இல் தனது 45-ஆவது வயதில் மறைந்தார்.
August 20, 2025 10:07 AM IST