
Last Updated:
திருச்சிற்றம்பலம் படத்தை திரில்லர் வகையாக மாற்றி சன் பிக்சர்ஸ் வெளியிட்ட டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 100 கோடி வசூல் செய்த இப்படம், நித்யா மேனனுக்கு சிறந்த நடிகை விருதும் பெற்றது.
தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை திரில்லர் வகையாக மாற்றி எடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற புதிய டிரைலரை படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காதல், நட்பு, எமோஷனலை அடிப்படையாகக் கொண்ட ஃபீல் குட் படமாக இப்படம் உருவானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது.
Reimagining Thiruchitrambalam as a thriller!💥 A dark trailer of #Thiruchitrambalam pic.twitter.com/tFpTFEtcrJ
— Sun Pictures (@sunpictures) March 4, 2025
இந்நிலையில் இந்தப் படம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில், டிரெய்லர் ஒன்றை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிரடி சண்டைக்காட்சிகள், மிரட்டலான காட்சிகளை அழகாக எடிட் செய்து திரில்லர் ஜானருக்கு மாற்றியுள்ள டிரெய்லர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சிறந்த நடிகைக்காக நித்யா மேனனுக்கும், சிறந்த நடன அமைப்புக்காகவும் என இரண்டு தேசிய விருதுகளை திருச்சிற்றம்பலம் படம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
March 05, 2025 6:53 AM IST
[]
Source link