Last Updated:
11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை (11ஆம் தேதி) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களது ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், சில அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும், அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (11ஆம் தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வந்துள்ளது.
அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 11.12.2025 (வியாழக்கிழமை) ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதன் விளைவாக, அரசு ஊழியர்களில் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும்.
அவர்களுக்கு ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு உரிமை வழங்கப்படமாட்டாது. பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியம் பெறுபவர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. நாளை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
December 10, 2025 10:20 PM IST






