Last Updated:
Chennai Ayodhya mandapam : அயோத்யா மண்டபம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடனும், முதலமைச்சருடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
கோயில்களுக்கு முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டது. இதற்காக கையடக்க கணினி கோயில்களுக்கு வழங்கப் படுவதாகவும், எனவே பொதுமக்கள் டெபிட் கார்டு (debit card) மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது இந்த கால கட்டம் அல்ல. ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தை இந்த துறை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய அமைச்சர், அயோத்திய மண்டபம் 2013ல் ஏற்பட்ட பிரச்னை என்றார். இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவை நேற்று நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், சட்ட வல்லுனர்கள் மற்றும் முதல்வர் ஆலோசனை பின்னரே இதில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சேகர்பாபு
தொடர்ந்து பேசிய அமைச்சர், தஞ்சை சப்பரம் திருவிழாவை அந்த பகுதி பொதுமக்களே நடத்தியுள்ளனர் என்றும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அந்த கோயில் இல்லை என்று கூறினார். வருங்காலங்களில் இனி இதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இது தொடர்பான விளக்கம் நேற்றே பேரவையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
April 28, 2022 11:14 AM IST







