
Last Updated:
ஹீரோ மோட்டோகார்ப், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 க்கு முன்னதாக மேம்படுத்தப்பட்ட 2025 டெஸ்டினி 125 ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. இது மூன்று வகையான மாடலில் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய வடிவமைப்பு, புதிய ஹார்டுவேர், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கிளாஸ்-லீடிங் மைலேஜ் ஆகியவற்றுடன் வருகிறது.
ஹீரோ மோட்டோகார்ப், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 க்கு முன்னதாக மேம்படுத்தப்பட்ட 2025 டெஸ்டினி 125 ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. இது மூன்று வகையான மாடலில் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 80,450 (எக்ஸ்-ஷோரூம்- டெல்லி) ஆகும். புதிய வடிவமைப்பு, புதிய ஹார்டுவேர், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கிளாஸ்-லீடிங் மைலேஜ் ஆகியவற்றுடன் வருகிறது.
வேரியண்ட்ஸ் மற்றும் விலை (எக்ஸ்-ஷோரூம்): டெஸ்டினி 125 ஆனது VX, ZX மற்றும் ZX+ ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஹீரோ டெஸ்டினி 125 VX ஆனது ரூ.80,450 விலையிலும், ஹீரோ டெஸ்டினி 125 ZX ஆனது ரூ.89,300 விலையிலும் மற்றும் ஹீரோ டெஸ்டினி 125 ZX+ ஆனது ரூ.90,300 விலையிலும் கிடைக்கிறது. 125சிசி பிரிவில் போட்டியிடும் ஹீரோ பைக் ஆனது, சுஸுகி ஆக்சஸ் 125, ஹோண்டா ஆக்டிவா 125, யமஹா ஃபேசினோ 125 மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 போன்றவற்றுடன் நேரடியாக போட்டியிடுகிறது.
ஹீரோ டெஸ்டினி 125: அம்சங்கள்: ஹீரோ மோட்டோகார்ப் ஆனது டெஸ்டினி 125 இல் இல்லுமினேடட் சுவிட்சுகள், சீட்க்கு கீழே ஸ்டோரேஜ் லைட்டிங், ஃபிரன்ட் இண்டிகேட்டர் மற்றும் ஆட்டோ-கேன்சிலிங் இண்டிகேட்டர் உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடன் வருகிறது- இது செக்மென்ட்டில் முதல் முறையாகும். புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பெறுகிறது
2025 டெஸ்டினி ஆனது புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது, எனவே இது புளூடூத் கனெக்ட்டிவிட்டி வழியாக மொபைல் ஃபோனுடன் இணைக்கலாம். தவிர டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஈகோ இண்டிகேட்டர், ரியல் டைம் மைலேஜ் டிஸ்ப்ளே (ஆர்டிஎம்ஐ), டிஸ்டன்ஸ்-டு-எம்டி, சார்ஜிங் போர்ட் மற்றும் லோ பியூயல் இண்டிகேட்டர் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது கால்கள், மெசேஜ்கள் மற்றும் மிஸ்டு கால் அலெர்ட் போன்ற தகவல்களையும் ஸ்மார்ட்டேஷ்க்கு அனுப்புகிறது.
டிசைன் மற்றும் ஹார்ட்வேர்: டெஸ்டினி 125 ஆனது இப்போது ஒரு விசாலமான ஃப்ளோர்போர்டு, வசதியான சீட், வைடர் 12 இன்ச் ரியர் டயர் (100/80) மற்றும் 190 மிமீ ஃபிரன்ட் டிஸ்க் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, புதிய டெஸ்டினி ஆனது காப்பர்-டோன்டு குரோம் அஸன்ட்ஸ் உடன் நியோ-ரெட்ரோ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது, LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், டயமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் சிக்னேச்சர் H- ஷேப்டு LED டெயில் லைட்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. டெஸ்டினி 125 ஆனது எடர்னல் ஒயிட், ரீகல் பிளாக் மற்றும் க்ரூவி ரெட், காஸ்மிக் ப்ளூ மற்றும் மிஸ்டிக் மெஜந்தா ஆகிய ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
எஞ்சின் மற்றும் மைலேஜ்: ஹீரோ டெஸ்டினி 125 ஆனது 124.6 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 7,000 rpmமில் 9 bhp பவரையும், 5,500 rpmமில் 10.4 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது லிட்டருக்கு 59 கிமீ மைலேஜ் தரும்.
January 17, 2025 10:56 AM IST
[]
Source link