Last Updated:
முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகை கஸ்தூரி பாராட்டியுள்ளார். ‘அப்பா ஸ்டாலின்’ என நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகை கஸ்தூரி பாராட்டியுள்ளார். ‘அப்பா ஸ்டாலின்’ என நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் – வசந்தி தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். வசந்தி 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்த நிலையில், கமலக்கண்ணன் கூலி வேலைக்குச் சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார். சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதியடைந்த கமலக்கண்ணன் கடந்த 14ஆம் தேதி திடீரென உயிரிழந்தார்.
தந்தை இழந்த சோகத்தில் இருந்த பிள்ளைகள், அவரது உடலை அடக்கம் செய்யக் கூட பணமின்றி நிர்கதியாய் நின்றதை கண்டு கலங்கிய கிராம மக்கள், பணத்தை திரட்டி உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், வறுமை காரணமாக மூன்று மகள்களும் படிப்பை இடை நிறுத்தியதை அறிந்த முதலமைச்சர், அவர்களை தொடர்புக்கொண்டு அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தாயையை இழந்து தந்தையையும் இழந்த பிள்ளைகளை அரவணைத்துகொண்ட அப்பா ஸ்டாலின்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை
மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும்
அது ஈரமும் இதயமும் அற்ற எந்திரமல்ல.
ஒரு குடும்பத்திற்கான குணக்கூறுகள் உடையது என்பதற்கு சாட்சி சொல்லும் ஆட்சியாளராக முதல்வர் சிறந்து நிற்கிறார்; பால் நினைந்தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்து நிற்கிறார்.
அழுத கண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான்” என்று கண்ணனுக்கு எழுதிய பாட்டு வரிகள் முதல்வர் என்ற அண்ணனுக்கும் பொருந்தும் மக்கள் இந்த அறச்செயலை
மறக்க மாட்டார்கள்; நெகிழ்ந்து புகழ்ந்து மகிழ்கிறார்கள் தொடரட்டும் நல்லாட்சி” என தெரிவித்துள்ளார்.
November 18, 2025 11:49 AM IST
[]
Source link








