
Last Updated:
Chennai : சென்னையில் அதிக சப்தமெழுப்பும் ஹாரன் மற்றும் சைலெண்சர், தவறான நம்பர் பிளேட்டுகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, சென்னை போக்குவரத்து காவல்துறையினர் இரண்டு நாட்களில் 1600 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதனை தவிர்ப்பதத்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே 1 ம் தேதி சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். இந்த சிறப்பு நடவடிக்கையில் குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் (defective Number Plate) கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் ஓட்டியதாக 9 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மேலும், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (No Parking) 215 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக மே 1 ம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில் 1,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2ம் தேதி நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன், மியூசிக்கல் ஹாரன், அதிக ஒலியெழுப்பும் சைலெண்சர், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் மீறி வாகன பதிவெண் தகடு பொறுத்தி வாகனம் இயக்கிய 607 நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாகன சோதனை
குறிப்பாக அதிக சப்தம் எழுப்பும் ஹாரம் பயன்படுத்தியதாக 163 வழக்கு பதிவுகளும், மியூசிகல் ஹாரன் பயன்படுத்தியதாக 17 வழக்கு பதிவுகளும், அதிக சப்தமெழுப்பும் சைலெண்சர் பயன்படுத்தியதற்காக 103 வழக்கு பதிகவுகளும், விதிகள் மீறி வாகன பதிவெண் பயன்படுத்தியதற்காக 291 வழக்குகள் என மொத்தம் 607 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
