Last Updated:
சிவகங்கையில் கடந்த நான்கு நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றிருக்கும் நிலையில், கணேசன் படுகொலை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த திருப்பாச்சேத்தி காவலர் ராஜா ஒருமையில் வசைபாடியுள்ளார்.
சிவகங்கை அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே உள்ள நாட்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அதிமுக கிளைச்செயலாளராகவும் பதவி வகித்தார். இவர் இன்று அதிகாலை தனது கடையை திறக்க வரும்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கணேசனை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் கணேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணேசனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
சிவகங்கையில் கடந்த நான்கு நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றிருக்கும் நிலையில், கணேசன் படுகொலை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த திருப்பாச்சேத்தி காவலர் ராஜா ஒருமையில் வசைபாடியுள்ளார்.
இதையடுத்து, காவலர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
Sivakasi,Virudhunagar,Tamil Nadu
November 04, 2024 11:49 AM IST
[]
Source link