
Last Updated:
2 படங்களின் ஷூட்டிங்கிற்கு இடையே அஜித் குமார் அதிரடியாக உடல் எடையை குறைத்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார்.
விடாமுயற்சி, குட்பை, துபாய் கார் ரேஸ் என பிஸியாக இருந்த நடிகர் அஜித்குமார் மிக குறைந்த நாட்களில் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார். அவரது திடீர் மாற்றம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20 கிலோ அளவுக்கு அவர் தனது உடல் எடையை குறைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உடல் எடை குறைந்ததற்கு பின்னணியில் என்ன காரணம் என என்பதை அறிவதில் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வெளியான 3நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இதேபோன்று அஜித் “குட் பேட் அக்லி” என்ற இன்னொரு படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஜித்குமார் கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளியான பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2 படங்களின் ஷூட்டிங்கிற்கு இடையே அஜித் குமார் அதிரடியாக உடல் எடையை குறைத்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். இந்நிலையில், அஜித் உடல் எடையை குறைத்ததன் ரகசியம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
பொதுவாக உணவு பிரியரான அஜித்குமார் உடல் எடையை குறைப்பதற்காக தனக்கு பிடித்தமான உணவுகளை தவிர்த்துவிட்டாராம். குறிப்பாக, அசைவத்தை அவர் முழுவதுமாக கடந்த சில மாதங்களாக விலக்கி வைத்துள்ளார்.
தொடர்ந்து சைவ உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டது அஜித்குமாரின் அதிரடியான உடல் எடை குறைப்புக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
February 09, 2025 9:56 PM IST
[]
Source link