
Last Updated:
தற்போது தேநீர் இடைவேளை வரையில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ் மேன் ஜோ ரூட் 6000 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோ ருட் தற்போது இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெறும் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜோ ரூட் 69 ஆவது மேட்ச்சில் இன்று விளையாடினார். 25 ரன்களை அவர் கடந்தபோது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்தார்.
இந்த சாதனையை ஏற்படுத்தும் முதல் வீரர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த இடங்களில் உள்ள வீரர்களில் பெரும்பாலானோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் 4225 ரன்கள் எடுத்து 3 ஆவது இடத்தில் இருக்கிறார்.
மேட்ச்சைப் பொருத்தளவில் இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. தற்போது தேநீர் இடைவேளை வரையில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்துள்ளது.
August 03, 2025 8:41 PM IST
[]
Source link