Last Updated:
ஆயிரம் இருந்தாலும் விஜய் எனது தம்பி என முன்னர் குறிப்பிட்ட சீமான், த.வெ.க. மாநாட்டை தொடர்ந்து, எதிரியில் தம்பி என்று பார்க்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
திராவிடம், தமிழ்தேசியத்தை பிரித்து பார்க்க போவதில்லை என விஜய் நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், இந்த புதிய தத்துவத்தை கேட்டு பயந்துவிட்டதாக சீமான் சாடியுள்ளார். திராவிட மாடல் என்ற போர்வையில் கொள்ளை என திமுகவை விஜய் மறைமுகமாக குறிப்பிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் உடைய அதிமுகவை விமர்சிக்காதது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக செய்வது மதவாதம் என்றால் காங்கிரஸ் செய்வது மிதவாதமா? விஜய் அதுபற்றி பேசாதது ஏன்? என்ற கேள்வியை சீமான் முன்வைத்துள்ளார். விஜயை தம்பி என சீமான் அன்பாக குறிப்பிட்டாலும், நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை என கடுமையாக விளாசியுள்ளார்.
தவெக முதல் மாநாட்டுக்கு கூடிய கூட்டம் கொள்ளையடிக்க வந்த கூட்டம் அல்ல என்ற விஜய் கைக்காட்டியிருந்தார். அதற்கு, நயன்தாராவை காணவும் 4 லட்சம் பேர் கூடியதாக சீமான் விமர்சித்துள்ளார். நமது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டதால், இனி நம் முன் எதிரிகள் வந்து நிற்பார்கள் என விஜய் எதிர்பார்த்தது போல், கொள்கையில் அண்ணன் தம்பி இல்லை என்று சீமான் முடிவெடுத்து எதிர்க்க தொடங்கிவிட்டார்.
2026 ஆம் ஆண்டில் மக்கள் எடுக்க போகும் முடிவு குறித்து இரு கட்சி தலைவர்களும் வைத்திருக்கும் நம்பிக்கை என்னவென்றும் தெரிவித்துள்ளனர்.
November 03, 2024 10:48 AM IST
[]
Source link






