Seeman | “பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன்”

Spread the love

Last Updated:

சீமான், பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என பகிரங்கமாக பேசியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான், சீதாலட்சுமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

SeemanSeeman
Seeman

பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, தான் வெடிகுண்டு வீசுவேன் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பெரியாருக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைத்தார். அப்போது, “பெரியார் வைத்திருப்பது வெங்காயம். என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, தான் வெடிகுண்டு வீசுவேன். என்ன நடக்குது என்று பிறகு பாருங்கள். வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் வீசவில்லை. வீசினால் என்ன ஆகும் என்று பாருங்கள்” என்று சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

மேலும் பேசுகையில், தமிழ் தேசியத்தை தான் பற்ற வைத்து விட்டதாகவும், அது தற்போது எரிந்து கொண்டு இருப்பதாகவும் சீமான் கூறினார். பேராபத்தான திராவிடத்திற்கு எதிரான அரசியலை, தான் முன்னெடுத்து இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் சீமான் பதில் அளித்தார்.

 

முன்னதாக திராவிடத்திற்கு எதிரான பேராபத்தான அரசியலை முன்னெடுப்பதாக அதே கூட்டத்தில் பேசிய சீமான், தனது அரசியல் குறித்து திருமாவளவனின் கருத்துக்கும் சீமான் பதில் அளித்தார்.

Also Read | OTT Spot | ரெண்டே சம்பவம்.. முதல் பாதி தரம்.. இரண்டாம் பாதி தாறுமாறு.. இந்த ஓடிடி படத்தை மிஸ் பண்ணாதீங்க!

“திமுகவால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் வென்று காட்ட முடியாது. பெரியார் குறித்து பேசி ஓட்டு வாங்கினால் அது தீட்டு” என்றும் பேசினார் சீமான்.

 

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஐந்தாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று பவானி சாலையில் உள்ள நெரிக்கல்மேட்டில் சீதாலட்சுமிக்கு வாக்கு கேட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதாக சீமான், சீதாலட்சுமி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக சீமான் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *