
Last Updated:
அடல்ட் காமெடி படமாக உருவான ‘பெருசு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடல்ட் காமெடி படமாக உருவான ‘பெருசு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் என பலர் நடித்த படம் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த மார்ச் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அடல்ட் காமெடி படமாக இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் வரவேற்பை பெற்றன. ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் மட்டுமே வெளியாகும். இந்தியில் ரீமேக் உரிமை விற்கப்பட்டிருப்பதால், இந்தியில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
April 06, 2025 9:57 PM IST
[]
Source link