Last Updated:
இந்த திரைப்படம் இன்றைக்கும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமத்தை ஜியோஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.
ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் லோகா திரைப்படம் ஓடிடியில் வெளியாகுவது குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளன.
சமீபகாலமாக மலையாள படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. முக்கியமாக தமிழ் ரசிகர்கள் தமிழ் படங்களை காட்டிலும் மலையாள திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
அதில் முக்கியமாக சிதம்பரம் இயக்கத்தில் செளபின், ஸ்ரீநாத் பாஷி உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை முக்கிய உதாரணமாக சொல்லலாம். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கேரளா மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல் தமிழ்நாட்டில் ஃபகத் ஃபாசிலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கிய ஆவேஷம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படங்களின் வரிசையில் தற்போது கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் தற்போது வெளியான லோகா திரைப்படமும் இணைந்துள்ளது.
மலையாள சினிமா வரலாற்றில் உலகளவில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது தற்போ லோகா பெற்றுள்ளது. அதன்படி உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், கேரளாவில் மட்டும் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படம் இன்றைக்கும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமத்தை ஜியோஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.
October 11, 2025 10:33 PM IST
[]
Source link



