
Last Updated:
இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி மற்றும் இளமை இதோ இதோ உள்ளிட்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முந்தைய படங்களை விடவும் அஜித் ஸ்லிம் ஆன தோற்றத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி மற்றும் இளமை இதோ இதோ உள்ளிட்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்த பாடல்கள் தனது அனுமதி இல்லாமல் படத்தில் இடம்பெற்றதாக கூறி இளையராஜா தரப்பிலிருந்து 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இளையராஜா சார்பில் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தின் மீது காப்பி ரைட் மீறல் சட்டத்தின் கீழ் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார். இதற்கிடையே இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
September 16, 2025 11:12 PM IST
[]
Source link