
Last Updated:
சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘விலங்கு’ வெப்சீரிஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்திருந்தார். சுவாஸிகா, பாபா பாஸ்கர், பால சரணவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்தார். படத்தை லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்திருந்தார்.
படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் கதையை சூரி எழுந்தியிருந்தார். படம் ரூ.40 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

OTT வெளியீடு குறித்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில், “மாமன்” என் மனதுக்கு நெருக்கமான படம், இப்படம் குடும்ப உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அற்புதமான கதை. இப்படத்தை மிகச்சரியான முறையில் உருவாக்கியதில் முழுப்பங்களித்த எங்கள் குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
மேலும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்த சூரி அண்ணாவின் அற்புதமான நடிப்புக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். ZEE5 மூலம் இப்படம் பரந்த அளவில், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும், மேலும் மனித இதயங்களைத் தொடும் மற்றும் குடும்ப பிணைப்புகள் பற்றிய உரையாடல்களைத் தூண்டும் என்று நம்புகிறேன்” என்றார்.
July 28, 2025 9:39 PM IST
[]
Source link