சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 720 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
அதன்பிறகு, வரும் 28 ஆம் தேதி அது தீவிர புயலாக வலுப்பெறலாம் என்றும், அன்றைய தினம் இரவு, ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு திங்கட்கிழமையன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 27) முதல் அக். 29 வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேபோல அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா, பாபட்ல, அனக்காப்பள்ளி, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 27, 28,29 ஆகிய நாட்களும், கிழக்கு கோதாவரி, அன்னமய்யா, கடப்பா, ஏலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்டத்தில் 27, 28 ஆகிய நாட்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
October 26, 2025 10:23 PM IST
Montha Cyclone : மொந்தா புயல் எதிரொலி… தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை


