Exit Poll Results 2024 LIVE Updates: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்? ஆட்சியை பிடிக்கப்போவது யார்? | Breaking and Live Updates

Spread the love


November 20, 20249:44 AM IST

Tamil Live Breaking News : சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றும் ஒரே நாளில், புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் 6 வருகை விமானங்கள், மொத்தம் 12 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இவைகள் அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு இன்று காலை 7.45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், காலை 8.25 மணிக்கு கொல்கத்தா விமானம், காலை 9.40 மணி பெங்களூரு விமானம், காலை 10.10 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 12.35 மணி சிலிகுரி விமானம், இரவு 10.45 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதை போல் சென்னைக்கு வர வேண்டிய காலை 9 மணி பெங்களூரு விமானம், பகல் 12 மணி புவனேஸ்வர் விமானம், பகல் 1.40 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 1.45 மணி கொல்கத்தா விமானம், மாலை 6.40 மணி சிலிகுரி விமானம், இரவு 10.05 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 12 விமானங்கள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி | Japan ruling party picks Sanae Takaichi as new leader; likely to be first female PM

    Spread the love

    Spread the love      டோக்கியோ: ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜப்பானின் ஆளும் கட்சியாக லிபரல் டெமாக்ரடிக் கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவராகவும் ஜப்பானின் பிரதமராகவும்…


    Spread the love

    Breaking News | பேருந்தின் சிசிடிவி காட்சிகளை தர விஜய் ஒப்புதல் | TVK Vijay Campaign | News18 | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      தனது பரப்புரை வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாக தகவல். | | | karur stampede, tvk karur stampede, karur stampede news, karur stampede live, karur stampede 2025,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *