‘Bad Girl’ டீசர் விவகாரம்: மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Spread the love


Last Updated:

சிறுமி ஆபாச காட்சிகள் நிறைந்த ‘பேட் கேர்ள்’ BAD GIRL டீசர் தனிப்பட்ட ஒரு நபருக்கான பாதிப்பு இல்லை. ஒட்டு மொத்த இளம் மாணவ பருவத்திற்கான பாதிப்பு. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் அளித்த புகார் மனு..

News18News18
News18

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பாரத் இயக்கியுள்ள திரைப்படம் ‘Bad Girl’. இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளனர். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது 2025-க்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் NETPAC விருதினை வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘Bad Girl’ திரைப்படம் வென்றது. டீனேஜ் பெண் ஒருவரின் மன ஓட்டங்களையும், காதலையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்த டீசரில், பாலியல் உணர்வுகள் சார்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பின. மேலும் பலரும் படத்தின் டீசருக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுமி ஆபாச காட்சிகள் நிறைந்த ‘பேட் கேர்ள்’ BAD GIRL டீசர் தனிப்பட்ட ஒரு நபருக்கான பாதிப்பு இல்லை. ஒட்டு மொத்த இளம் மாணவ பருவத்திற்கான பாதிப்பு. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் அளித்த புகார் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, “நீங்கள் ஏன் டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது காவல் நிலையத்தில் தனிப்பட்ட புகார் ஏன் கொடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.

[]

Source link


Spread the love
  • Related Posts

    வெங்கட் பிரபு, பிரேம் ஜி, ஸ்ரீகாந்த் தேவா.. இசை குடும்பங்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்? – வீடியோ இதோ

    Spread the love

    Spread the love      Last Updated:March 10, 2025 7:01 AM IST இசைக் குடும்பங்களைச் சேர்ந்த வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சபேஷ்-முரளி, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இணைந்து பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. News18 தமிழ் சினிமாவின் இசைக்…


    Spread the love

    துருவ் விக்ரமின் பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்..

    Spread the love

    Spread the love      Last Updated:March 07, 2025 6:34 PM IST இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ், துருவ் விக்ரம்,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *