Annual Life Certificate: வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க உதவும் எளிய வழிகள்!

Spread the love


Last Updated:

Annual Life Certificate | அரசின் ஜீவன் பிரமான் வெப்சைட்டில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகார அமைப்பு மூலம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை ஆன்லைனில் வழங்கலாம்.

News18News18
News18

அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழை எவ்வாறு சமர்ப்பிக்கலாம் என்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை ஓய்வூதிய துறை (Department of Pension) வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தங்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது முக்கியமானது. இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

பேங்க் ஆஃபிஸர் வெரிஃபிகேஷன்

வருடாந்திர ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க இது மிகவும் பொதுவான வழியாகும். இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன் இரண்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள வங்கியின் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர் தனது பென்ஷனை பெறுகிறார் என்றால், அவர் தனது ஆயுள் சான்றிதழை வங்கி அதிகாரியிடம் கையொப்பம் வாங்கி சமர்ப்பிக்கலாம். இதன் பொருள் அவர்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஏஜென்ட் வெரிஃபிகேஷன்

வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள் இந்தியாவுக்கு வர இயலவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்ஸ்களை கொண்டு தங்கள் சார்பாக அவர்களை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வைக்கலாம். எனினும் இப்படி சமர்பிக்கும் சான்றிதழில் மாஜிஸ்திரேட், நோட்டரி, பேங்க்கர் அல்லது இந்திய தூதரகப் பிரதிநிதி கையொப்பமிட வேண்டும். இந்த செயல்முறை ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வார் வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கிறது.

டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க எளிதான மற்றும் மிகவும் பிரபலமான வழி டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் ஆகும். ஒருவர் தனது டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை ஆன்லைனில் சமர்ப்பிக்க ஜீவன் பிரமான் சிஸ்டமை பயன்படுத்தலாம். இந்த டிஜிட்டல் சிஸ்டம் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்துகிறது மற்றும் jeevanpramaan.gov.in-இதற்காக பயன்படுத்தலாம். அரசின் ஜீவன் பிரமான் வெப்சைட்டில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகார அமைப்பு மூலம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை ஆன்லைனில் வழங்கலாம்.

இந்திய தூதரகம் அல்லது consulate வெரிஃபிகேஷன்

இந்தியாவுக்கு செல்ல முடியாத ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தாங்கள் வசிக்கும் நாட்டில் இருக்கும் இந்திய தூதரகம் அல்லது துணை தூதரகத்தில் தங்களுடைய ஆயுள் சான்றிதழை வெரிஃபை செய்து கொள்ளலாம். தூதரகம் அல்லது துணைத் தூதரகம் குறிப்பிட்ட நபரின் பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (PPO) அல்லது பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தின் அடிப்படையில் அவர்களின் அடையாளத்தை சரிபார்க்கும். சரிபார்க்கப்பட்டதும் அவர்கள் குறிப்பிட்ட நபர் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆயுள் சான்றிதழை வழங்குவார்கள்.

போஸ்டல் சப்மிஷன்

ஓய்வூதியம் பெறுபவர் இந்திய தூதரகம் அல்லது துணை தூதரகத்திற்கு நேரில் செல்ல முடியாவிட்டால், தனது ஆவணங்களை தபால் மூலம் மேற்கண்ட அலுவலகங்களுக்கு அனுப்பலாம். இதற்கு உரிய சான்றிதழுடன் நேரில் ஆஜராக இயலவில்லை என்பதை வெளிபடுத்தும் மருத்துவ சான்றிதழை இதற்காக வழங்க வேண்டியிருக்கலாம். இதனை தொடர்ந்து தூதரகம் அல்லது துணைத் தூதரகம் அவர்களின் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க உதவும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

Annual Life Certificate: வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க உதவும் எளிய வழிகள்!

[]

Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *