
Last Updated:
Allu Arjun | ரேவந்த் ரெட்டி திரையுலகத்துக்கு முழுவதும் ஆதரவாக இருக்கிறார். ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியானபோதும், டிக்கெட் விலை உயர்வுக்கு அனுமதி கொடுத்தார்.
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் திரையிடலின்போது அல்லு அர்ஜுன் வருகையால், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதைallu arjun |யடுத்து அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பாக பேசியுள்ள நடிகரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண், “அல்லு அர்ஜுன் கைதுக்கு ரேவந்த் ரெட்டி தான் காரணம் என கூறுவதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “சினிமாவை பொறுத்தவரை அது ஒரு கூட்டு முயற்சி. அதில் எல்லோரையும் பங்கும் உண்டு. இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் மட்டும் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளார். இது சரியல்ல என நினைக்கிறேன். முன்கூட்டியே திரையரங்கு நிர்வாகத்தினர் இது தொடர்பாக அல்லு அர்ஜுனிடம் தெரிவித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இது போன்ற விவகாரத்தில் நான் காவல்துறையினரை குற்றம் சாட்டுவதில்லை. காரணம் அவர்களுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். சொல்லப்போனால் சிரஞ்சீவி கூட திரையரங்குகளுக்கு செல்வார். ஆனால் அவர் தனியாக யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் செல்லக்கூடியவர். நானும் கூட இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறேன். திரையுலக பிரபலங்களுக்கான விருதுகளும், புகழும் தவிர்க்க முடியாதது. ரசிகர்களை பிரபலங்கள் சந்திக்கவில்லை என்றால், அவர்கள் மீதான ரசிகர்களின் கண்ணோட்டம் மாறிவிடும்” என்றார்.
மேலும், “ரேவந்த் ரெட்டி திரையுலகத்துக்கு முழுவதும் ஆதரவாக இருக்கிறார். ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியானபோதும், டிக்கெட் விலை உயர்வுக்கு அனுமதி கொடுத்தார். திரையுலகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆதரவாகவே இருக்கிறார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயரை நிகழ்வு ஒன்றில் அல்லு அர்ஜுன தவிர்த்துவிட்ட காரணத்தால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறுவது முற்றிலும் தவறானது. ரேவந்த் ரெட்டியே அந்த நிலையில் இருந்தாலும், அவரும் அல்லு அர்ஜுன் போல கைது செய்யப்பட்டிருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை” என்றார்.
December 31, 2024 1:48 PM IST
[]
Source link