
Last Updated:
வெளிநாடுகளுக்குச் சென்றால் நல்ல வேலைவாய்ப்பும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும் என நம்பி பலரும் தங்கள் குடும்பத்தை வறுமையை போக்க இந்தியாவை விட்டு கிளம்பி செல்கிறார்கள்
வெளிநாடுகளுக்குச் சென்றால் நல்ல வேலைவாய்ப்பும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும் என நம்பி பலரும் தங்கள் குடும்பத்தின் வறுமையை போக்க இந்தியாவை விட்டு கிளம்பி செல்கிறார்கள். ஆனால் சிலரோ இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை நம்பி ஏமாந்து போவதோடு பல இன்னல்களையும் கொடுமைகளையும் சந்திக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் ஹமிதா பானு. வேலை தேடிச் சென்ற ஹமீதா பானு பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு கடத்தப்பட்டார். தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாகா எல்லைக்கு அருகில் உள்ள அட்டாரியில் ஹமீதாவும் அவரது குடும்பமும் சந்தித்து கொண்டனர். இத்தனை வருட காத்திருப்பிற்கு பிறகு தனது குடும்பத்தோடு இணைந்துள்ளார் ஹமீதா.
முதலில் ஏன் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றார்? இத்தனை வருடங்கள் பாகிஸ்தானில் அவர் என்ன செய்தார்? என்பதை விரிவாக பார்ப்போம். ஹமீதா 2002-ம் ஆண்டு சமையல் வேலைக்காக கத்தார் நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்குள்ள ஒரு நபர் துபாயில் வேறொரு வேலையை வாங்கி தருவதாக ஹமிதாவிற்கு உறுதியளித்திருக்கிறார். ஆனால் அவர் ஹமிதாவை துபாய்க்கு அழைத்துச் செல்லாமல் பாகிஸ்தானின் கராச்சிக்கு கடத்தினார்.
தான் நன்றாக ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த ஹமீதா, எப்படியாவது தனது நான்கு குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அங்கேயே சாலையோரங்களில் வாழ ஆரம்பித்தார். இரவில் தங்குவதற்கு அருகிலுள்ள மசூதியை பயன்படுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி பிழைப்பிற்காக ஒரு கடையையும் அங்கு நடத்தி வந்துள்ளார் ஹமீதா.
இதற்கிடையில் முகமது டார் என்ற பாகிஸ்தானியரை ஹமீதா மணந்தார். ஆனால் இவர் 2010-ம் ஆண்டு உயிரிழந்தார். 2022-ம் ஆண்டு, ஒரு யூடியூபர் இவரை நேர்காணல் செய்து சமூக ஊடகங்களில் ஹமிதாவின் வாழ்க்கைச் சூழலை வீடியோவாக வெளியிட்டார். இந்த வீடியோவில் தான் எதிர்கொள்ளும் சோதனையைப் பற்றி அவரிடம் கூறினார். இந்த யூடியூபரை ஹமிதாவிற்கு சிறுவயதிலிருந்தே தெரியும்.
யூடுயூபர் வலியுல்லா மரூஃப் (Valliullah Maroof) வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தானும் மற்றொரு பெண்ணான ஷெஹ்னாஸும் கராச்சிக்கு கடத்தப்பட்டதாக இதில் ஹமீதா கூறினார். ஷெஹ்னாஸ் பெங்களூருவை சேர்ந்தவர். இந்த வீடியோவை பார்த்த கராச்சியில் உள்ள இந்திய தூதரகம், உடனடியாக அவருக்கு கராச்சியில் இருந்து லாகூருக்கு விமான டிக்கெட்டை ஏற்பாடு செய்தது. அவர் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு அவரது உறவினர்கள், மகன் மற்றும் மகள்கள் ஹமிதாவை சந்தோஷமாக வரவேற்றனர்.
இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வது குறித்து ஹமீதாவிடம் கேட்கப்பட்டபோது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். இது தாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் செய்யும் துரோகமா என்று கேட்டதற்கு, தன்னுடைய ஆர்வமே தன்னைத் ஊக்கப்படுத்தியது என்று பதிலளித்தார்.
ஹமீதா தனது குடும்பத்துடன் மீண்டும் இணையப் போவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், ஷெஹ்னாஸையும் இந்தியா அனுப்ப முயற்சிப்பதாகவும், விரைவில் அவரும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்றும் யூடியூபர் கூறினார். இவரால் தன் இன்று ஹமீதா தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.
December 20, 2024 3:29 PM IST
[]
Source link