
Last Updated:
ரஷ்யா தாக்குதல் நடத்திய வீடியோ ஒன்றை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுடன் ரஷ்யா மீது கூடுதல் தடைகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே வாரத்தில் மட்டும் 600க்கும் அதிகமான ஆளில்லா விமானத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாகவும் இதனால் தொடர்ந்து தங்கள் நாட்டின் வான்வெளியை பாதுகாத்து வருவதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் இருக்கும் ஏராளமான பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்த ஐநா உள்ளிட்ட பல்வேறு உலக அமைப்புகள் முயற்சி மேற்கொண்டாலும் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா அதிகரித்திருப்பதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதில் சுமார் 700 க்கும் அதிகமான சிறிய ரக குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யா தாக்குதல் நடத்திய வீடியோ ஒன்றை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுடன் ரஷ்யா மீது கூடுதல் தடைகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும், தங்களது கிராமங்கள், நகரங்களை காப்பாற்ற இந்த உதவி அவசியம் தேவைப்படுவதாகவும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
Almost every day, we defend our skies against Russian missiles and drones. Just last night, Ukraine was attacked by 103 Shahed drones, which contained 8,755 foreign-made components. Over the past week, Russia has used more than 630 strike drones, approximately 740 guided aerial… pic.twitter.com/BGoIdMyVd1
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) January 5, 2025
ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது வான்வழி தாக்குதலை சமாளிக்கும் அளவுக்கு உக்ரைனிடம் உபகரணங்கள் இல்லை. இதனை தங்களுக்கு உலக நாடுகள் வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக கூடுதல் ராணுவ தளவாடங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என அமெரிக்கா கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. மேலும் உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
January 06, 2025 8:57 PM IST
[]
Source link