
Last Updated:
விஜயின் ‘ஜன நாயகன்’ டீசர் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
விஜயின் ‘ஜன நாயகன்’ டீசர் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘ஜன நாயகன்’. இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜுன் 22-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
April 29, 2025 2:09 PM IST
[]
Source link