
Last Updated:
Palamedu Jallikattu | பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை 10 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் விளையாட உள்ளனர்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டி வருகின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு 4,820 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 1,900 மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்த நிலையில் அவர்களில் 910 வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காலை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதையடுத்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன் உறுதிமொழி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற காளைகள் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியை 10 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் விளையாட உள்ளனர். முதல் இடம் பிடிக்கும் காளைக்கு டிராக்டர் பரிசும், முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு கார் பரிசும் வழங்கப்பட உள்ளன. இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Madurai,Tamil Nadu
January 15, 2025 8:33 AM IST
[]
Source link