ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு!

Spread the love


Last Updated:

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாகேந்திரன் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு!ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு!
ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு!

தாம்பரம் அருகே ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக நடந்து சென்ற இன்ஜினியர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கம் புனிதவதி காலனி ராஜிவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (58). இவர் ஏசி பழுது பார்க்கும் தனியார் நிறுவனத்தில் இஞ்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வேளச்சேரி பிரதான சாலையில் நாகேந்திரன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

மேலும் படிக்க:87ஆவது வயதில் 10வது பாஸ் செய்த முன்னாள் முதலமைச்சர்

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாகேந்திரன் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நாகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே இதுகுறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திரன் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடந்து சென்ற நபரை இருசக்கர வாகனத்தில் சென்று இடித்து விட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



Source link


Spread the love
  • Related Posts

    ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா

    Spread the love

    Spread the love      நியூயார்க்: ஆப்கனிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை…


    Spread the love

    திடீர் ட்விஸ்ட்… என்.டி.ஏ கூட்டணியில் சசிகலா… இன்று நடக்கும் பேச்சுவார்த்தை? | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:December 13, 2025 1:05 PM IST NDA alliance | தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜக தலைவர்கள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். விகே…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *