Last Updated:
இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர்
கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள் பேரணியை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர். கவனத்தை ஈர்க்கும் வாசகங்கள் மற்றும் சொற்றொடர்களைக் கொண்ட துண்டுப்பிரசுரங்களை ஏந்தியபடி பொதுமக்களுக்கு வில்லுபுணர்வை ஏற்படுத்தினர். மது அருந்த கூடாது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துக்கள் பயன்படுத்த கூடாது, அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ்,கூல் லிப் உள்ளிட்ட புகையிலை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியானது ஏரிச்சாலையில் உள்ள காந்தி பூங்காவில் இருந்து துவங்கி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பேரணியாக சென்று,சுற்றுலாப்பயணிகளுக்கும்,பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Jan 19, 2026 11:49 PM IST






