Last Updated:
கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளாக பெண்களுக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி, 125 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்த நடவடிக்கை, 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ. 25,000 மானியம், வீடு இல்லாதோருக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், எம்.பி. கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று தனது முதல் கருத்துக்கேட்பு கூட்டத்தை ஓசூரில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின்போது ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு எம்.பி. கனிமொழி பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் அறிக்கை, ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது: “நாங்கள் ஏற்கனவே ரூ.1000 வழங்கத் தொடங்கிவிட்டோம், இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கத் தொடங்கப்பட்டது.
#WATCH | Hosur, Tamil Nadu: On AIADMK General Secretary Edappadi K Palaniswami announced the first phase of the party’s election promises, DMK MP Kanimozhi says, “We have already started giving Rs 1000, and this scheme was launched to empower women. Another scheme they announced… pic.twitter.com/G9WNMGZOqq
— ANI (@ANI) January 19, 2026
பெண்களுக்கு இருசக்கர வாகனம் திட்டத்தை அறிவித்துள்ளார். அது ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமரை அழைத்துவந்து தொடங்கிவைத்தனர். ஆனால், அதன்பிறகு அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. எனவே தேர்தல் வாக்குறுதிகளாக ஏற்கனவே இருப்பதையும், அவர்களின் கடந்தகால சொந்தத் திட்டத்தையுமே தெரிவித்துள்ளார். மக்களுக்கு நீங்கள் (அதிமுக) யார் என்று தெரியும் எனவே உங்களை நம்பமாட்டார்கள்.
அவர்கள் கேட்டதுதான் சிபிஐ விசாரணை. அனைவரும் பதில் அளித்துதானாக வேண்டும். இந்த அமைப்புகள் உண்மையான எதிர்க்கட்சிகள் மீதுதான் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே நான் ஸ்லீப்பர் செல்கள் மற்றும் பிற விஷயங்களைப் பற்றி பேசவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
[]
Source link






