Last Updated:
chennai | சென்னையில் முன்னாள் காதலியுடன் ஸ்வீட்ஸ் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருமுல்லைவாயல் போலீசார் 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னை பாடி கலைவாணர் நகரை சேர்ந்தவர் சர்மிளா. இவர் , திருமுல்லைவாயிலில் உள்ள ஒரு ஸ்வீட்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் , திருவேற்காடு பகுதியை சேர்ந்த சங்கர் என்பருடன் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் , திடீரென இவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர். அதனால் சங்கர் அன்னரசிகா என்னும் பெண்ணை திருமணம் செய்தார் அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது .
இந்த நிலையில் சர்மிளா சங்கருடன் , தொலைபேசி மூலம் பேசி வந்தது தெரியவந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார் . சங்கருடன் பேசுவதை ஷர்மிளா நிறுத்தினார் . இந்நிலையில் , நேற்று மாலை , ஸ்வீட்ஸ் கடையில் ஷர்மிளா இருந்தார். அங்கு சங்கர் , தனது மனைவி , பிள்ளையுடன் வந்தார். கடையில் இருந்த ஷர்மிளாவிடம் குளிர்பானம் வாங்கி அருந்தி கொண்டிருந்தார். திடீரென சங்கருக்கும் ஷர்மிளாவுக்கும் தகராறு ஏற்பட்டது . வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஷர்மிளா , தனது தம்பி இளங்கோவனுக்கு போன் செய்தார்.
உடன் அவர் , நண்பர் சுரேந்திரன் வ/19 என்பவருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். கடையில் குளிர்பானம் அருந்தி கொண்டிருந்த சங்கரை இருவரும் சரமாரி தாக்கினர். இதில் சங்கர் நிலைகுலைந்து போனார். உடனே சங்கர் திருவேற்காட்டை சேர்ந்த நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்க ளில் 6 பேர் கும்பல் ஆயுதங்களுடன் வந்தது.
கடையை அடித்து நொறுக்கினர் அங்கிருந்த இளங்கோவன் , சுரேந்திரன் ஆகியோரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியே போர்க்களம் போல் ஆனது .சிறிது நேரத்தில் அந்த கும்பல் தப்பிசென்றது. தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீசார் படுகாயமடைந்த இளங்கோவன் , சுரேந்திரன் ஆகியோரை மீட்டு , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து , அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் சங்கர், தமிழ்செல்வன் , எரேமியா ஆகிய 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : கன்னியப்பன்
Apr 22, 2022 11:24 AM IST






