Last Updated:
சென்னை விமான நிலையம் அடுத்த பல்லாவரம் சந்தையானது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும். இந்த வார சந்தை மிகவும் பிரபலமானது.
சென்னை விமான நிலையம் அடுத்த பல்லாவரம் சந்தையானது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும். இந்த வார சந்தை மிகவும் பிரபலமானது. இதில் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி கலை பொருட்கள் சேகரிப்பாளர்கள் உள்பட பலரும் வாரந்தோறும் இந்த சந்தையில் பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.
கத்தரிக்காய் முதல் கணினி வரை எதையும் வாங்கிடலாம் என்பதற்காக சென்னை மட்டுமின்றி, சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்களின் கூட்டம் அலைமோதுவதால்
இந்த கூட்ட நெரிசலில் இருசக்கர வாகன திருட்டு, செல்போன் திருட்டு என தொடர்ந்து அரங்கேறி வந்ததால்
இதை தடுக்க பாதுகாப்புப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இந்த சந்தையின் பாதுகாப்புப் பணியில் எப்போதும் போலீசார் இருப்பார்கள். இன்று போலீசார் சந்தையில் பாதுகாப்பு பணியில் இல்லாததை அறிந்த செல்போன் கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை காட்ட வந்துள்ளார்.
இந்நிலையில் சந்தையில் செடிகள் மற்றும் கலைப் பொருட்கள் வாங்குவதற்காக, பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வந்துள்ளார். சந்தையின் விற்பனை வைத்திருந்த பொருட்களை பார்த்தும் ஆர்வத்துடன் வாங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது பத்திரமாக வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி சந்தைக்கு வந்த புஷ்பவனம் குப்புசாமி உட்பட 7, பேரிடம் இருந்து செல்போன் திருட்டு நடைபெற்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட செல்போனை இழந்தவர்கள் அனைவரும் உடனே பல்லாவரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது மக்கள் புகார் தெரிவிக்கும் போதே தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்திருக்காது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பல்லாவரம் குற்றப்பிரிவு போலிசார் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.







