
Last Updated:
விஜயின் ‘லியோ’ படத்தின் டிக்கெட் புக்கிங் சாதனையை மோகன்லாலின் ‘எம்புரான்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் ‘லியோ’ படத்தின் டிக்கெட் புக்கிங் சாதனையை மோகன்லாலின் ‘எம்புரான்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘லூசிஃபர்’. இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாளத்தில் ரூ.200 கோடி வசூலை ஈட்டிய முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் படத்தின் வரவேற்பை தொடர்ந்து அடுத்த பாகம் உருவாகியுள்ளது. ‘எம்புரான்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிருத்விராஜ் இயக்க மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் மார்ச் 27-ம் தேதி பான் இந்தியா முறையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுக்கவே ‘எம்புரான்’ படத்தின் டிக்கெட் புக்கிங் மார்ச் 21-ம் தேதி தொடங்கப்பட்டது. ஒரே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியதால், புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.
குறிப்பாக கேரளாவில் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஃபுல் ஆனது. ஒரு மணி நேரத்தில் 96.14k டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளன. இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கெட் விற்ற படம் என்ற சாதனையை எம்புரான் படைத்துள்ளது.
முன்னதாக விஜயின் ‘லியோ’ படம் ஒரு மணி நேரத்தில் 82 K டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘எம்புரான்’ முன்பதிவில் மட்டும் ரூ.6 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
March 22, 2025 10:02 PM IST
[]
Source link