Last Updated:
திமுக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்ய உள்ளார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மக்களிடம் கருத்துக்கேட்க புதிய செயலியை திமுக அறிமுகம் செய்ய உள்ளது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. திமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைமை அமைத்தது.
அந்த குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக சமீபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.
இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிப்பதற்காக பிரத்யேக செயலியை திமுக தலைமை உருவாக்கி உள்ளது.
இதனை புதன்கிழமையன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
Dec 30, 2025 10:16 PM IST







