நெட்டிசன்களை குழப்பமடைய வைக்கும் சென்னை கலைஞரின் ட்விட்.! வைரலாகும் போட்டோ | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

சென்னையை சேர்ந்த ஆர்ட்டிஸ்ட் ஒருவர் ட்விட்டரில் ஷேர் செய்த ஃபில்டர் காபியின் புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது.

சோஷியல் மீடியாக்களை பொறுத்த வரை வித்தியாசமாக இருக்கும் விஷயங்கள், பார்த்தவுடன் கண்களையும் மனதையும் ஈர்க்கும் விஷயங்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து விடுகின்றன. இது போன்ற பல புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்பி ரசிப்பதால் அவை எளிதில் வைரல் ஆகி விடுகின்றன.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த ஆர்ட்டிஸ்ட் ஒருவர் ட்விட்டரில் ஷேர் செய்த ஃபில்டர் காபியின் புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது. ஃபில்டர் காபியின் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆனார்களா என்று யோசிக்கலாம்.? அதற்கும் குறிப்பிட்ட ஆர்ட்டிஸ்ட் அந்த போட்டோவிற்கு கொடுத்த கேப்ஷன் தான் காரணம்.

அந்த ட்விட்டர் யூஸர் ஷேர் செய்துள்ள போட்டோவில் டபரா, டம்ளர் செட்டில் நன்கு நுரைக்க நுரைக்க, சூடாக ஆவி பறக்கும் ஃபில்டர் காபி, அதன் கீழே சிதறி கிடக்கும் சில காபி கொட்டைகள், அதனருகே தினசரி செய்தி தாள் உள்ளிட்டவை இருக்கின்றன. நீங்கள் ஒரு காபி பிரியர் எனில் அந்த போட்டோவை பார்த்து நிச்சயம் உடனே அதை சுவைத்தாக வேண்டுமே என்று நினைப்பீர்கள். அந்த அளவிற்கு அற்புதமான போட்டோவாக இருக்கிறது. ஆனால் இந்த போட்டோ வைரலாக காரணமே வேறு.

அந்த யூசர் வேறு என்ன கேப்ஷன் கொடுத்திருந்தாலும் இந்த போட்டோவை ஒருகணம் பார்த்து ரசித்து விட்டு கடந்து போயிருப்பார்கள் நெட்டிசன்கள். ஆனால் அவர் கொடுத்த கேப்ஷன் என்ன தெரியுமா.? “i painted filter coffee” அதாவது நான் இந்த ஃபில்டர் காபியை பெயிண்ட் செய்தேன் என்பது தான்.

ஆம் இவ்வளவு நேரம் பேசிய அந்த போட்டோவில் இருக்கும் காபி, நிஜத்தில் போட்டோ எடுக்கப்பட்ட காபி கிடையாது. அது ஒரு தத்ரூபமான பெயிண்டிங் என்பது தான் இங்கே ட்விஸ்ட். பலரும் அவரது கேப்ஷனை பார்த்து ஷாக் ஆகி விட்டனர். ஏனென்றால் உண்மையான டம்ளரில் காபி சூடு பறக்க இருப்பது போலவே அந்த போட்டோவில் உள்ள காபி செட்டப் இருப்பது தான் . அது அழகான பெயிண்டிங் தான் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள அந்த போட்டோவை பல முறை ஜூம் செய்து பார்த்தாலே தெரியும்.

இந்த ட்விட் போஸ்ட் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது. ட்விட்டர் தவிர இன்ஸ்டா உள்ளிட்ட வேறு சில சோஷியல் மீடியாக்களிலும் இந்த போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக காபி பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த அற்புத பெயிண்டிங்.

ஒரு சில யூஸர்கள் இது எந்த கேமரா மற்றும் என்ன ஃபில்டர் பயன்படுத்தினீர்கள் என்று அந்த ஆர்டிஸ்ட்டை கேட்க, அவர்களுக்காகவே தான் செய்த பெயிண்டிங்கின் டைம்லேப்ஸ் வீடியோவையும் ஷேர் செய்து வாயடைக்க வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அது ரியல் காபி இல்லை, பெயிண்டிங் தான் என்பதை உணர்ந்த யூஸர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



Source link


Spread the love
  • Related Posts

    Explore Dr. Carolyn Herring’s Dental Magic in Fishersville, VA!

    Spread the love

    Spread the love     Looking for a dentist who brings the magic to your smile? dr herring fishersville va in Fishersville, VA, is the dental expert you’ve been waiting for! Whether you…


    Spread the love

    அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

    Spread the love

    Spread the love      இந்​நிலை​யில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் ஞாயிற்​றுக்​கிழமை வெளி​யிட்ட பதி​வில், “இறக்​குமதி பொருட்​கள் மீது அதிக வரி விதிப்​பதால், அமெரிக்கா பணக்​கார மற்​றும் உலகில் மிக​வும் மதிக்​கப்​படும் நாடாக மாறும். வரி விதிப்பு பற்றி குறை…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *