Last Updated:
தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ரஜினியின் ‘கபாலி’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு, பெங்காலி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ராதி ஆப்தே நடித்த ‘ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதையொட்டி அவர் அளித்த நேர்காணல்கள் ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக பேசியிருக்கும் ராதிகா ஆப்தே, “தென்னிந்திய சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், நான் பணியாற்றிய சில படங்களின் படப்பிடிப்பில் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன்.
ஒரு படத்தில் என் மார்பகங்கள் மற்றும் பின்புறம் எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக பேட் (Pad) வைக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அது எனக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. அதிக பேட்களை வைக்க சொன்னார்கள். அப்போது, ‘வீட்டிலிருக்கும் உங்கள் அம்மாவிடம் இப்படி வைக்க சொல்வீர்களா?’ என கேட்க நினைப்பேன்” என்றார்.
[]
Source link







