Last Updated:
Chennai: கேரள சிறுமிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவன் சென்னையில் கைது
கேரள சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராமில் பழகி அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக கூறி மிரட்டிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளிடம் சென்னையைச் சேர்ந்த மார்க் டி குரூஸ் என்பவர் இன்ஸ்டாகிராம் என்கின்ற சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி சிறுமிகளிடமிருந்து புகைப்படங்களை பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாகவும் அவர்களின் குடும்பஉறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் கூறி அவர்களை மிரட்டியுள்ளார்.
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், பரங்கிமலை மாங்காளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மார்க் டி குரூஸ்(வயது-19) என்பவரை கைது செய்தனர், இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.
செய்தியாளர்: சுரேஷ்





